தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்து தேசிய விருது பெற்ற சிறந்த திரைப்படமான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து மறைந்த இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்த ஆண் தேவதை திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித்  கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியன், பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ்  சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்திருக்கும் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்பட்ட இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். நடிகர் மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் & வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு, எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, பிரபல பாடகர் கிரிஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி அமேசான் பிரைன் வீடியோவில் நேரடியாக வெளியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இத்திரைப்படத்தில் இடம்ப்பெற்ற பாடல்களின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அழகான அந்த மேக்கிங் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.