தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். கடந்த 2015-ம் ஆண்டு டம்மி டப்பாசு எனும் படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் நடந்த ஒரு போட்டோ ஷூட்டால் ட்ரெண்டாகி புகழின் உச்சிக்கே சென்றார். 

ramyapandian

தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார் ரம்யா. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வீட்டிலேயே இருக்கும் ரம்யா பாண்டியன் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்ட்டாகிராமில் பதிலளித்து வருகிறார். 

Ramyapandian

உங்கள் கைவசம் இருக்கும் படங்கள் என்ன என்று ரசிகர் ஒருவர் கேட்க, கையில் இரண்டு படங்கள் உள்ளது. சூர்யாவின் 2D நிறுவனத்துடன் ஒரு படம்  மற்றும்  CV குமார் நிறுவனத்துடன் ஒரு படம் என இரண்டு படங்கள் இருக்கிறது என்று பதிலளித்துள்ளார். சூர்யாவின் 2D நிறுவனம் குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்புக்களை தருபவர்கள். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடித்தது யோகம் என்று பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.