கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Ramya Imitates Panchathandhiram Simran Comedy

இந்நிலையில் VJ ரம்யா டிக்டாக் செய்து அசத்தியுள்ளார். உலகநாயகன் கமல் ஹாசன் நடித்த பஞ்சதந்திரம் படத்தின் நகைச்சுவை காட்சியை டிக்டாக் செய்துள்ளார். இந்த காட்சியில் சிம்ரனின் நடிப்பு அட்டகாசமாய் இருக்கும். அதே போல் ரம்யா நடித்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Ramya Imitates Panchathandhiram Simran Comedy

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் ரம்யா. உடற்பயிற்சி தவிர்த்து ஆடல் பாடல் என அசத்தி வரும் ரம்யாவின் இந்த வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

@actorramya

Drama Time 😂🤪🤯😜😎. ##panchathandiram ##simran_comedy

♬ original sound - abarnasundarraman