கடந்த 2014-ம் ஆண்டு முண்டாசுப்பட்டி எனும் வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் ராம்குமார். சிறு இடைவேளைக்கு பின் மீண்டும் விஷ்ணு விஷால் வைத்து ராட்சசன் படத்தை இயக்கினார். இந்த படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. தற்போது தனது அடுத்த படத்தில் நடிகர் தனுஷுடன் சேர்ந்து பணியாற்றவுள்ளார். 

Ramkumar

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். இதற்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தும், விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியிட்டும் வருகின்றனர். 

Natraj Ramkumar

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், கடவுள நூறு வருஷமா திட்டினோம்...இன்னைக்கு கடவுள் கதவை மூடிட்டாரு...என்ன பண்ணுவோம் மனிதர்களே என்று பதிவு செய்திருந்தார். அதற்கு ராம்குமார், அன்பும் அறிவியலும் மட்டும்தான் வெற்றி பெறும். 100 வருடங்களுக்கு முன்னாடியே வந்த பல கொள்ளை நோய்கள் அனைத்துக்கும் அறிவியல் தான் மருந்து கொடுத்துருக்கு, கடவுள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.