XB ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Master

இதனிடையே சில நாட்கள் முன்பு மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலஸில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது. பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மாஸ்டர் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரமேஷ் திலக், படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தளபதி விஜய் பற்றியும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார். 

Master Rameshthilak

அப்போது பேசுகையில், இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் திரைப்படம். நாம் பார்திடாத விஜய் சாரை இதில் பார்ப்போம். தெறி, பிகில் போன்ற படத்தில் நடிக்க வேண்டியது. சில காரணத்தினால் செய்ய முடியவில்லை. ஷிமோகாவில் படப்பிடிப்பு இருந்த போது, தினமும் கட்டி பிடிப்பார். ஒரு சீன் முடிக்கும் போது பயங்கர கிளாப் சவுண்ட் கேட்டது. அதுகுறித்து என் நண்பர்கள் மற்றும் விஜய்சேதுபதி சாரிடம் கேட்டறிந்தேன் எப்படி விஜய் சார் இப்படி நடிக்கிறார் என்று. திரையில் அக்காட்சி வரும் போது மிக மாஸாக இருக்கும் என்று கூறினார்.