பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் RRR.ராம்சரண் ஜூனியர் NTR இருவரும் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கின்றனர்.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

Ramcharan Jr NTR Accept Rajamouli Challenge

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர்மற்றும் ராம்சரண் குறித்த ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்க ராஜமௌலி தன் வீட்டு வேலைகளை செய்து மனைவிக்கு உதவி செய்து ஒரு வீடியோ வெளியிட்டார் மேலும் பல பிரபலங்களையும் இதற்கு நாமினேட் செய்தார்.

Ramcharan Jr NTR Accept Rajamouli Challenge

இவரது இந்த சவாலை ஏற்று RRR படத்தின் நாயகர்களான ராம்சரண் மற்றும் Jr .NTR இருவரும் தங்கள் வீட்டு வேலைகளை தாமே செய்து தங்கள் மனைவிகளுக்கு உதவும் வீடீயோவை தங்கள் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.