தமிழ் திரை உலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த வெற்றித் திரைப்படமாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தி வாரியர் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினெனி காவல்துறை அதிகாரியாக நடிக்க, இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் ஆதி வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் அக்ஷரா கௌடா, நதியா, பாரதிராஜா, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சீனிவாச சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தி வாரியர் திரைப்படம் சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ள, தி வாரியர் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.  இன்று ஜூலை 6ம் தேதி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொள்ளும் தி வாரியர் படத்தின் PRE RELEASE நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சிலம்பரசன்.TR பாடி வெளிவந்த புல்லட் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வேற லெவல் ட்ரெண்டானது. இதனையடுத்து வெளியான விசில் பாடல் வைரல் ஹிட்டடிக்க, தி வாரியர் திரைப்படத்திலிருந்து அடுத்த பாடலாக தற்போது கலர்ஸ் பாடல் வெளியாகியுள்ளது. அந்தப் பாடல் இதோ…