தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் கதாநாயகனாக நடித்த மகதீரா திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் ரீமேக்காக துருவா படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மீண்டும் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த RRR திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. கடைசியாக தனது தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து ராம்சரண் நடித்த ஆச்சார்யா திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த ஆச்சாரியார் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற தவறியது.

அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணைந்துள்ள ராம்சரண் RC15 திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனை அடுத்து ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. இந்த திரைப்படத்தை உப்பெனா படத்தின் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்குகிறார்.

பஞ்ச வைஷ்ணவ் தேஜ் மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த உப்பெனா திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் புச்சி பாபுசனாவின் அடுத்த படமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ், வ்ரித்தி சினிமாஸ் மற்றும் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரின் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Excited about this !!

Looking forward to working with @BuchiBabuSana & the entire team.@vriddhicinemas @SukumarWritings #VenkataSatishKilaru @MythriOfficial pic.twitter.com/hXuI5phc7L

— Ram Charan (@AlwaysRamCharan) November 28, 2022