தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.தமிழில் கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியிருந்த NGK படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.சில ஹிந்தி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் ரகுல்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கொரோனா நேரத்தில் ரசிகர்களுடன் உரையாடுவது,வீடியோக்களை பகிர்வது என்று தனது பொழுதை கழித்து வந்தார் ரகுல்.

இவரது சமீபத்திய மாலத்தீவு ட்ரிப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வந்தன.கொரோனாவிற்கு பிறகு சிவகார்த்திகேயனின் அயலான் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்று வந்தார்  ரகுல் ப்ரீத் சிங்.

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்தார் ரகுல்.இவர் விரைவில் குணமடைய ரசிகர்களும்,பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வந்தனர்.தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக ரகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.