தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.தமிழில் கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருந்த NGK படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Rakul Preet Singh Opens Yotutube Channel Corona

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.

Rakul Preet Singh Opens Yotutube Channel Corona

தற்போது நிறைய நேரம் உள்ளதால் ரகுல் ஒரு யூடியூப் சேனல் ஓபன் செய்வதாகவும் அதில் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளார்.இதில் இருந்து வரும் வருமானத்தை பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.