திரையுலகின் சிறந்த நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியவர், தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

கொரோனா காலத்தில் நடிகை ரகுல் ப்ரீத் செய்த காரியத்தை யாராலும் மறக்க முடியாது. தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி உதவினார். மேலும் ஹைதராபாத்தில் அல்லும் பகலும் உழைத்து வரும் காவல்துறை அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

சமீபத்தில் போதைப் பொருள் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயர் அடிபட்டது. அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷரத்தா கபூர் ஆகியோருடன் ரகுல் பிரீத் சிங்கும் விசாரிக்கப்பட்டார். ஆனால், தனக்கும் போதை பொருளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று விளக்கினார் ரகுல். 

நடிகைகள் கிடைக்கும் நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வார்கள். அங்குள்ள நீச்சல் குளத்தில் இருந்து புகைப்படம் வெளியிட்டு ட்ரெண்ட் செய்வார்கள். தற்போது அந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார் ரகுல் பிரீத் சிங். ஒர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகமாக பதிவிட்டு வந்த ரகுல், இப்போது கிளாமர் நிறைந்த புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக்கி இருக்கிறார். தெலுங்கு பட ஷூட்டிங் முடிந்த கையோடு ஹாலிடேவுக்காக இப்போது மாலத்தீவு சென்றிருக்கிறார் ரகுல் பிரீத் சிங். மாலத்தீவை மினி பாலிவுட் ஆக்கிவிட்டார்கள் நம் ஹீரோயின்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். 

அங்கு ஏற்கனவே காஜல் அகர்வால், வேதிகா, பிரணிதா, மௌனி ராய், மந்திரா பேடி, டாப்ஸி என பலர் அங்கு சென்று புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு குடும்பத்துடன் சென்று வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார் ரகுல். கடலின் வாசனையை நுகருங்கள், ஆகாயத்தை உணருங்கள், உங்கள் ஆத்மா பறக்கட்டும் என்று கவித்துவமாக கேப்ஷன் செய்துள்ளார். இதை பல இணையவாசிகள் லைக் செய்துள்ளனர். 

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார் ரகுல். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்துப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் ரகுல். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் CG பணிகள் ஒருபக்கம் இருக்க, படப்பிடிப்பும் மீதம் உள்ளது போல் தெரிகிறது.