தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியவர், தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

RakulPreetSingh

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். சமையல், நடனம், பாடல், விளையாட்டு என அசத்தி வருகின்றனர். 

Rakul Preet Singh

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது சகோதரருடன் விளையாடி நேரத்தை கழிக்கிறார். சிறு வயதில் விளையாடிய அனைத்து விளையாட்டுக்களையும் மீண்டும் துவங்கியதாக பதிவில் கூறியுள்ளார். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் நடித்துள்ளார் ரகுல்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#quarantinediaries with @amanpreetoffl ❤️

A post shared by Rakul Singh (@rakulpreet) on