மலையாளத்தில் பிரபல சீரியல் நடிகையாக இருந்து வருபவர் தேவிகா நம்பியார்.Thanka Bhasma Kuriyitta Thamburatty, Ganesha Meendum Santhipom உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் தேவிகா நம்பியார்.

அடுத்ததாக Mazhavil Manorama சேனலில் ஒளிபரப்பாகி வரும் ராக்குயில் தொடரில் ஹீரோயினாக நடித்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் தேவிகா நம்பியார்.விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இவருக்கு தற்போது பிரபல இசையமைப்பாளருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.கேரளாவின் பிரபல இசைக்கலைஞரும்,பிரபல இசையமைப்பாளருமான விஜய் மாதவ்.இவருக்கும் தேவிகா நம்பியாருக்கும் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.தேவிகா நம்பியார் மற்றும் விஜய் மாதவ் ஜோடிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.