மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் ராஜாதி ராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் என இரண்டு படங்களை இயக்கியவர் அஜய் வாசுதேவ். இவர் மூன்றாவது முறையாக இயக்கும் திரைப்படம் குபேரன். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு மலையாளத்தில் ஷைலாக் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜோபி ஜார்ஜ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

mamooty rajkiran mamooty

மம்மூட்டியுடன் இணைந்து ராஜ்கிரண் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். ராஜ்கிரண் நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுவே. மீனா இந்தப் படத்தில் நடித்துள்ளார். 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் மற்றும் மீனா இணைந்து நடித்துள்ளனர். கலாபவன் ஷாஜன் வில்லனாக நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் சித்திக் நடித்துள்ளார்.

rajkiran mamooty

பிபின் மோகன், அனீஸ் ஹமீது இருவரும் இணைந்து இந்தப் படத்தின் கதையை எழுத, ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்க, ரணதீவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  தற்போது படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.