தமிழ் திரையுலகில் பாம்பே திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராய் கால் பதித்தவர் ராஜிவ் மேனன். தொடர்ந்து மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜி.வி.பிரகாஷ் வைத்து சர்வம் தாளமயம் படத்தை இயக்கினார். தற்போது மிர்ச்சி சிவா நடிக்கும் சுமோ படத்தில் ஒளிப்பதிவாளராய் பணியாற்றியுள்ளார். 

Rajiv Menon About Kandukondain Kandukondain 2

கடந்த 2000-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். மம்மூட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், மணிவண்ணன், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். நாளைய தேதியுடன் இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிறது. 

Rajiv Menon About Kandukondain Kandukondain 2

இந்நிலையில் இந்த படத்திற்கு 2ம் பாகம் கேட்டு வெளியான ஒரு செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் ராஜிவ் மேனன். இதற்காக தான் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்த படி இதன் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.