சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9-ம் தேதி வெளியான படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரஜினி ரசிகர்களை கொண்டாட செய்தது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இதனைத்தொடர்ந்து சிவா இயக்கும் தலைவர் 168 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். சமீபத்தில் பியர் க்ரில்ஸ் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

rajini

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தினர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தார். வெகு நாட்களுக்கு பிறகு போலீஸ் கேரக்டரில் சூப்பர்ஸ்டார் நடித்திருந்தார். 

rajinikanth

2 மணி நேரம் 39 நிமிடங்கள் உள்ள இந்த திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுவரை 170 கோடி வசூல் செய்துள்ளதாக பேசப்படுகிறது. தற்போது படத்தின் OST எனப்படும் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியானது.