பொங்கலுக்கு வெளியான தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகிவரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Rajinikanth Tamil New Year Wishes Corona Lockdown

இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.தனது அரசியல் பிரவேசம் குறித்த விளக்கத்தை கடந்த மாதம் ரஜினி வெளியிட்டார்.இவர் பங்குபெற்ற நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Rajinikanth Tamil New Year Wishes Corona Lockdown

இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட ரஜினி,தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி கொரோனா பரவாமல் தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த நேரத்தில் மக்களுக்கு உதவி செய்யும் நன்றி என்று தெரிவித்த ரஜினிகாந்த் பத்திரமாக இருங்கள் இதுவும் கடந்து போகும் என்று பதிவிட்டிருந்தார்.