தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன்.பொல்லாதவன்,ஆடுகளம்,வடசென்னை படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது

Rajinikanth Reacts To Asuran Interval Scene

மஞ்சு வாரியர்,பசுபதி,ஆடுகளம் நரேன்,கென் கருணாஸ்,டீஜே,பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Rajinikanth Reacts To Asuran Interval Scene

கடந்த வாரத்துடன் 100 நாட்களை கடந்து இந்த படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது.இதில் பேசிய தயாரிப்பாளர் தாணு.இந்த படத்தின் வெற்றி பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தார்.இந்த படத்தை சூப்பர்ஸ்டார் பார்த்து மிகவும் ரசித்தார் என்றும் இன்டெர்வல் காட்சியின் போது பாட்ஷா என்று கத்தியதாக தெரிவித்தார்.மேலும் தனுஷ் தனது மகனுக்காக மக்கள் காலில் விழும் காட்சியை பார்த்துவிட்டு இந்த படத்தில் நடிக்கவிரும்பியதாகவும் தெரிவித்தார்.

Rajinikanth Reacts To Asuran Interval Scene