ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்கும் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான சிவா அண்ணாத்த திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

சன் பிக்சர்ஸ் - கலாநிதி மாறன் தயாரிப்பில் ,வெற்றி ஒளிப்பதிவு செய்ய, முன்னணி இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ள அண்ணாத்த திரைப்படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ், ஐக்கி ஷெராப், சூரி, ஜார்ஜ் மரியான், சதீஷ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் திருவிழாவாக வருகிறது அண்ணாத்த திரைப்படம்.  அண்ணாத்த படத்தின் முதல் பாடலாக சில தினங்களுக்கு முன்பு வெளியான அண்ணாத்த...அண்ணாத்த... பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இசையுலகின் ஈடு இணையற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் கடைசி பாடலாக அமைந்தது அண்ணாத்த... அண்ணாத்த... பாடல். 

இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் 2-வது பாடலாக சாரல் காற்றே பாடல் தற்போது வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், டி.இமான் இசையில் பாடகர்கள் சிட் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் குரலில் வெளிவந்த அழகான பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.