தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் தயாராகிவரும் #SK20 படத்தில் நடித்து வருகிறார். #SK20 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் #SK21 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள சயின்ஸ் ஃபிக்சன் நகைச்சுவை திரைப்படமான அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட மற்றும் VFX பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 

முன்னதாக டான் திரைப்படத்தை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டிய நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் டான் படக்குழுவினரை நேரில் அழைத்தும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். 

இது குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய சினிமாவில் டான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றேன்... இந்த 60 நிமிடங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக இருக்கும்... மிக்க நன்றி தலைவா உங்களது பொன்னான நேரத்தை எனக்கு வழங்கி என்னை பாராட்டியதற்காக..!" என குறிப்பிட்டுள்ளார். வைரலாகும் சிவகார்த்திகேயன்-ரஜினிகாந்தின் புகைப்படம் இதோ…