வைரலாகும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ !
By Aravind Selvam | Galatta | October 13, 2022 21:18 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.50 வருடங்களுக்கும் மேலாக தனது படங்கள் மூலம் ரசிகர்களை எண்டெர்டைன் செய்து வருகிறார்.இவரது திரைப்படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா கோலம் கொள்ளும்.பல வருடங்கள் நடித்து வந்தாலும் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக இவரது பட வசூல்கள் இருக்கும்.
தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் 2021 தீபாவளிக்கு திரைக்கு வந்து சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.இந்த படத்தினை தொடர்ந்து இன்னும் சில படங்கள் ரஜினிகாந்த் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரஜினி நடிக்கும் அடுத்த படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை டாக்டர்,பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ரம்யா கிருஷ்ணன்,யோகி பாபு,வசந்த் ரவி,விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடலூரில் நடைபெற்று வரும் இந்த ஷூட்டிங்கை முடித்து விட்டு செல்லும் போது ரசிகர்களிடம் கையசைத்து விடைபெற்றார் ரஜினி.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Thalaivar Superstar @rajinikanth at #Jailer shooting today at Cuddalore 💜 pic.twitter.com/QnkVjUOhmX
— Ⓜ️🅰️N🅾️ (@rajini_mano) October 13, 2022