இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட   போதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.மிககவசம் சானிடைசர், சமூக இடைவெளி, தடுப்பூசி என எத்தனை எத்தனை நோய் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்  எடுத்த போதிலும் நோய் தொற்று கட்டுக்குள் இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதால் மருத்துவமனைகளுக்கு வெளியில் நோயாளிகள் ஆம்புலன்சில் தனியார் வாகனங்களிலும் ஆட்டோவிலும் என காத்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. 

ஒருபுறம் போதிய படுக்கை வசதி இல்லை மறுபுறம் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை என மருத்துவத் துறையும் அரசாங்கமும் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஆக்சிஜன் தயாரிப்பிலும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதிலும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்திருந்தார். 

இதையடுத்து  பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின்  பல பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருவதை நாம் பார்க்கிறோம். முன்னதாக நடிகர் சூர்யா நடிகர் கார்த்தியின் குடும்பம், நடிகர் அஜித்குமார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ,பாடலாசிரியர் வைரமுத்து என பலரும் உதவிக்கரம் நீட்டிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதி உதவி அளித்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைமைச்செயலகத்தில் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து  கொரோனா பொது நிவாரண நிதிக்காக 50 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிதியுதவி அளித்தது குறித்தும் அரசாங்கத்தின் அனைத்து அறிவுறுத்தல்களையும் மக்கள் கடைபிடித்து விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து விடுபட முடியும் என்றும்  கூறினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல பிரபலங்களும் நிதி உதவி அளித்து வருகிற நிலையில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நிதிஉதவி அளித்திருப்பது அனைவரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.