உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்டவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் ரசிகர் ஒருவருக்காக சற்று முன்பு ஆடியோ அனுப்பி இருக்கிறார். அந்த ஆடியோ பதிவு வெளியாகி இணையத்தை அதிர வைத்து வைரலாகி வருகிறது. மும்பையில் சிகிச்சை பெற்றுவரும் ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி பற்றி உருக்கமான பதிவு ஒன்றை செய்திருந்தார். 

அதில், தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச் சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதை பார்த்த ரஜினி அவருக்கு ஆடியோ ஒன்றினை அனுப்பி இருக்கிறார்.

அதில் அவர் உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா... விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ரஜினிகாந்த் பேசியுள்ளார். மேலும் அவர் தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், குணம் அடைந்த பிறகு குடும்பத்தினருடன் தனது வீட்டிற்கு வரும்படி அழைப்பும் விடுத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு உலகம் முழுவதும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்காக அவர் இப்படி ஆடியோ பதிவு செய்து அனுப்பி இருப்பது அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சி ஆக்கியிருக்கிறது. அது பற்றி அதிகம் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

ரஜினி அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் 2ம் வாரம் முதல் துவங்க உள்ளது என தகவல் பரவி வருகிறது. இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

ஹைதராபாத்தில் தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோப் உடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இணையத்தில் செய்திகள் வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.