ட்ரெண்ட் அடிக்கும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் !
By Aravind Selvam | Galatta | August 28, 2021 16:23 PM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக 2020 பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வந்த அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில்நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டது.பின்னர் முக்கால்வாசி ஷூட்டிங் முடிக்கப்பட்டு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெகு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @sooriofficial சகோ!!
— vetri (@vetrivisuals) August 27, 2021
எல்லா வளங்களும் நலங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.#HBDSoori #HappyBirthdaySoori pic.twitter.com/UyBuUeoGg8