ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’-ல் இணையும் அமிதாப் பச்சன்.. 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி..! - விவரம் உள்ளே..

ரஜினிகாந்த் திரைப்படத்தில் அமிதாப் பச்சன் விவரம் உள்ளே - amithab bachan joins rajinikanth thalaivar 170 check details | Galatta

இந்தியா சினிமாவில் உச்சபட்ச நடிகர்களில் உலகளவில் ரசிகர்களை கொண்டு தமிழ் சினிமாவின் பெருமையாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பல தசாப்தங்களாக பல மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்து இன்னும் அவர் சரியான திரைபடங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களை உற்சாகப் படுத்தி வருகிறார். தற்போது அவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பான் இந்திய அளவு எதிர்பார்ப்பை கொண்டுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது படத்திற்கான இறுதி கட்ட வேலையில் மும்முரம் காட்டி வருகின்றனர் ஜெயிலர் படக்குழுவினர். ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களது 170 திரைப்படத்தை லைகா தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தினை ஜெய் பீம் திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து பிரபலமான இயக்குனர் த.செ.ஞானவேல் அவர்கள் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்திற்கு பின் தலைவர் 170   என்ற பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் படமாக்கப் படவுள்ளது.

படத்திற்கான நடிகர் நடிகைகள் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர் குறித்து எந்தவொரு அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இருந்தும் ரசிகர் மத்தியில் நடிகர் - நடிகைகள் யார் என்பதைப் பற்றியான தகவல்களும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. முன்னதாக படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்க கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து சியான் விக்ரமிடம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து எந்தவொரு தகவலும் உறுதியாக வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது தலைவர் 170 திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமிதாப் பச்சன் நடிப்பது குறித்து ரஜினிகாந்த் மகிழ்ச்சியடைந்ததாகவும் தகவல் வெளியானது.  இந்த தகவல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனால் படக்குழுவிடமிருந்து இது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1991 ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஹும்’ படத்தில் அமிதாப் பச்சன் , ரஜினிகாந்த் கடைசியாக ஒன்றாக நடித்துள்ளனர். பெரும்பாலான அமிதாப் பச்சன் திரைப்படங்கள் ரஜினிகாந்த்  நடித்து ஹிட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. தலைவர் 170 ல் அமிதாப் ஒருவேளை நடிக்கவிருந்தால் முதல் முறையாக அமிதாப் பச்சன் நேரடியாக தமிழில் நடிக்கும் முதல் படமாக இப்படம் இருக்கும். மேலும் 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்றும் குறிப்பிடப்படும். 

“வாழ்வின் கடிமான சோதனையில்..” சமூக ஊடகங்களில் இருந்து விலகினார் பிரபல நடிகை கஜோல் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“வாழ்வின் கடிமான சோதனையில்..” சமூக ஊடகங்களில் இருந்து விலகினார் பிரபல நடிகை கஜோல் – வைரலாகும் பதிவு இதோ..

“இது அஜித் சாருக்கு ரொம்ப பிடிச்சது” வாலி பட வாய்ப்பு குறித்து எஸ் ஜே சூர்யா, மாரிமுத்து பகிர்ந்த தகவல்.. -  Exclusive interview இதோ..
சினிமா

“இது அஜித் சாருக்கு ரொம்ப பிடிச்சது” வாலி பட வாய்ப்பு குறித்து எஸ் ஜே சூர்யா, மாரிமுத்து பகிர்ந்த தகவல்.. - Exclusive interview இதோ..

கோபி சுதாகர் மேல பொறாமையா? விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஈரோடு மகேஷ் – Exclusive Interview உள்ளே..
சினிமா

கோபி சுதாகர் மேல பொறாமையா? விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஈரோடு மகேஷ் – Exclusive Interview உள்ளே..