பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் பொங்கலை ஒட்டி நேற்று வெளியானது.

Darbar Telecasted Producer File Complaint Lyca

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ரஜினி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Darbar Telecasted Producer File Complaint Lyca

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவரும் இந்த படம் ரிலீசான நாள் முதலே தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட பல இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது.இதற்கு எதிராக படக்குழுவினர் வழக்கு தொடர்ந்திருந்தார்.தற்போது இந்த படம் சட்டவிரோதமாக டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

Darbar Telecasted Producer File Complaint Lyca

மதுரை சேர்ந்த லோக்கல் சேனலான சரண்யா டிவியில் இந்த படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Darbar Telecasted Producer File Complaint Lyca