பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajini Darbar Punch Dialogues AR Murugadoss

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Rajini Darbar Punch Dialogues AR Murugadoss

தர்பார் படத்திற்கான பிரத்யேக நேர்காணலின் போது பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஒரு ஐ அம் வெயிட்டிங் இருப்பதை போல இந்த படத்தில் ரஜினிக்கு ஒரு டயலாக் உள்ளது படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.