பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் பொங்கலை ஒட்டி நேற்று வெளியானது.

Rajini Darbar First Day Chennai Box Office Report

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ரஜினி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Rajini Darbar First Day Chennai Box Office Report

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவரும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.சென்னையில் மட்டும் இந்த படம் முதல் நாளான நேற்று ரூ.2.27 கோடிகளை வசூல் செய்துள்ளது.சென்னையில் 2 கோடிகளை வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை சர்க்கார்,2.0 படங்களை அடுத்து பெற்றுள்ளது.

Rajini Darbar First Day Chennai Box Office Report