ராஜவம்சம் திரைப்பட ட்ரைலர் வெளியீடு !
By Sakthi Priyan | Galatta | January 15, 2021 10:52 AM IST

தமிழ் சினிமா உலகில் இயக்கம் மற்றும் நடிப்பு என அசத்துபவர் சசிகுமார். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சுப்ரமணியபுரம், ஈசன், நாடோடிகள், போராளி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் ஆகிய அனைத்து படங்களும் ரசிகர்களின் ஃபேவரைட். கடந்த 2019-ம் ஆண்டு பேட்ட, கென்னடி கிளப், அடுத்த சாட்டை மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா என தொடர்ச்சியாக படங்கள் தந்தார்.
சசிகுமார் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் ராஜவம்சம். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. குடும்பங்களின் மகிமையை உணர்த்தும் விதத்தில் இந்த ட்ரைலர் காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகிறது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் T.D.ராஜா தயாரித்துள்ளார்.
ராஜவம்சம் படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து மானே உன்ன, மாப்பிள்ள வந்தா ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ வெளியானது. இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழு. இதனால் நிச்சயம் ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை அதிகமாக இருக்கும் என்று கூறலாம். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.
சசிகுமார் கைவசம் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படமும் உள்ளது. இந்தப் படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கிறார் மிருணாளினி ரவி. இதைத்தொடர்ந்து முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்கிறார் சசிகுமார்.
சமீபத்தில் சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அனிஸ் இயக்கி வரும் இப்படத்தில் வாணி போஜன், பிந்து மாதவி, நாசர், சதீஷ்,ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
Sasikumar's Rajavamsam Movie Official Trailer | Nikki Galrani
15/01/2021 11:29 AM
Pongal Special: New unseen video from Master released | Thalapathy Vijay
15/01/2021 10:35 AM
Bigg Boss 4 Tamil Promo - Shivani makes a surprise entry! Check Out!
15/01/2021 09:56 AM