தமிழ் திரையுலகில் இயக்கம் மற்றும் நடிப்பு என அசத்துபவர் சசிகுமார். இவரது நடிப்பில் கடைசியாக அடுத்த சாட்டை திரைப்படம் வெளியானது. சசிகுமார் கைவசம் நாடோடிகள் 2, எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம் டா போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. 

sasikumar sasikumar

அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் ராஜவம்சம். இதில் நாயகியாக நிக்கி கல்ரானி நடிக்கிறார். இப்படத்தில் சசிகுமாருடன் விஜயகுமார், தம்பி ராமையா, மனோபாலா, ராஜ்கபூர், சிங்கம்புலி, ரேகா ஆகியோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 

rajavamsam sasikumar

ராஜவம்சம் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. தற்போது மானே உன்ன பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சாம் சி.எஸ் பாடிய இந்த பாடல் வரிகளை வடிவேலு எழுதியுள்ளார். பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளை நடிகர் சதீஷ் பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.