கோயிலுக்குச் சென்ற பெண்ணைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், இரவு நேரத்தில் தனது உறவினர் ஒருவருடன் கோவிக்குச் சென்றுள்ளார். அப்போது, மது போதையில் 3 பேர் அவர்களை வழிமறித்து, சரமாரியாகத் தாக்கத் தொடங்கி உள்ளனர். இதனால், அந்த பெண்ணின் உறவினர், அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

Rajasthan Raped

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணை கடுமையாக தாக்கி, அங்கிருந்து கடத்திச் சென்று 3 பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

Rajasthan Raped

இதனிடையே, தப்பி ஓடிய அவர்களது உறவினர், அருகில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்று, நடந்ததைக் கூறி உதவி கேட்டுள்ளனர். அப்போது, உதவிக்கு யாரும் முன்வராத நிலையில், ஒருவர் மட்டும் துணிச்சலுடன் உதவிக்கு வந்துள்ளார். அவரை அழைத்துக்கொண்டு, அந்த பெண்ணை தேடிச் சென்றபோது, 3 பேரும் சேர்ந்து, அந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்தார்கள்.

அப்போது, ஆண் ஒருவர் வருவதைக் கண்டு, போதையிலிருந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மேலும், பாதிக்கப் பட்ட பெண்ணும், “இவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவாரோ” என்ற பயத்தில், உடம்பில் சிறு துணி கூட இல்லாத நிலையில், ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் பிறந்த மேனியாக ஓடியுள்ளார்.

Rajasthan Raped

காப்பற்ற வந்தவர், அங்கிருந்த ஆடைகளை எடுத்துக்கொண்டு, பின்னாடியே ஓடிச்சென்று, தான் காப்பற்ற வந்துள்ளதாகவும், தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டாம் என்றும் கத்தி உள்ளார். இதனையடுத்து, அந்த பெண் நின்றுள்ளார். தொடர்ந்து தனது ஆடைகளை வாங்கி அவற்றை மாற்றிக்கொண்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் புாகர் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தடயங்களைச் சேகரித்து, பெண்ணைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களைத் தேடி வருகின்றனர். கோயிலுக்குச் சென்ற பெண்ணை கடத்தி, 3 பேர் கூட்டுப் பலியால் பலாத்காரம் செய்த சம்பவம், ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.