மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் நிஹாரிகா.இதனை தொடர்ந்து ரம்யாகிருஷ்ணன் நடித்த வம்சம் தொடரில் நடித்து சீரியல் நடிகையாக அறிமுகமானார்.தெலுங்கிலும் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார் நிஹாரிகா.

இதனை அடுத்து படங்களில் அறிமுகமான இவர் சக்கபோடு போடு ராஜா,எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட படஙகளில் முக்கிய வேடத்தில் நடித்தார்,இவற்றை தவிர வட்டம்,உன்னால் என்னால்,எவனும் புத்தனில்லை போன்ற படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார் நிஹாரிகா.

ராஜா ராணி சீசன் 2வில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் நிஹாரிகா இந்த தொடர் தொடர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது,அடுத்ததாக வேலைக்காரன் தொடரிலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்தார் இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது,இவற்றை தவிர ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இவர் இயக்குனர் ரஜித்தை காதலித்து கரம்பிடித்தார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவ்வப்போது தனது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது தனது கணவருடன் ஒரு ரொமான்டிக் முத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.