கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த சீரியல்களில் ஒன்று திருமணம்.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது.இந்த தொடர் இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த தொடர். சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வந்தனர்.

இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம்,ஷேர்சாட் என்று ரசிகர் பக்கங்கள்,வீடியோ மற்றும் போட்டோ எடிட்கள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.

கொரோனாவை அடுத்து விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடரின் ஒளிபரப்பு அக்டோபர் 16 அன்று நிறைவுபெற்றது.தொடரை திடிரென்று எதிர்பாராமல் நிறைவு செய்ததால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.இந்த தொடரின் முன்னணி நட்சத்திரங்களாக நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் காதலித்து வருகின்றனர்,விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது சித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது உதவியாளர் போல ஒருவர் போலி பக்கம் நடத்தி வருவதாகவும் அவரிடம் உஷாராக இருக்கவேண்டும் என்றும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

raja rani 2 thirumanam sidhu about fake instagram profile