விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும்,நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்.அப்படி இந்த தொடரில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்த தொடர் நாம் இருவர் நமக்கு இருவர்,500 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் நிறைவுக்கு வந்தது.இந்த தொடரின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசனில் ஒரு ஹீரோயினாக நடித்து அசத்தியவர் ராஷ்மி ஜெயராஜ்.தனது நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.இந்த சீரியலுக்கு பிறகுகு இவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கி வெற்றிநடை போட்டுவரும் ராஜபார்வை தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.முன்னா இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.

வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த தொடரில் பிரபல நடிகையும் தொகுப்பாளினியுமான ஆனந்தி இந்த தொடரில் இணைந்துள்ளார் புதிய திருப்பங்களுடன் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது என்ற தகவலை தொடரின் நாயகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.