கடந்த ஆண்டு வெளிவந்து இமாலய வெற்றியடைந்த படம் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர்., பாகுபலியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய இந்த உருவான இப்படத்திற்கு படம் அறிவிப்பிலிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. பிரிட்டிஷ் எதிர்த்து இந்தியாவின் சுதந்திர போராட்ட காலத்தின் அடிப்படையில் இரண்டு தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கதையுடன் உருவாக்க படமாக திரைக்கு வெளிவந்து வெகுவாக மக்களை கவர்ந்தது. ராம் சரண் , ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான இப்படத்திற்கான வசூல் ஒரு புறம் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உலகளவில் அங்கீகாரம் கிடைக்கப்பட்டு வருகிறது. . தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில்  படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த தருணத்திலும் படத்திற்கான வரவேற்பு உலகளவில் கிடைத்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் உலகளவில் மதிப்பு மிக்க விருதான கோல்டன் குலோப் விருது விழாவிற்கு இரண்டு பிரிவுகளில் ஆர் ஆர் ஆர் படம் சமர்பிக்கபட்டது. வேற்று மொழி படங்கள் பட்டியல் மற்றும் சிறந்த பாடல் பட்டியலிலும் இடம் பெற்றது.  லாஸ் ஏஞ்சல்ஸ்நகரில் நடைபெற்ற இப்படத்திற்கு ராஜமௌலி, நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி கலந்து கொண்டனர்.

raja mouli rrr naatu naatu song wins prestigious golden globe award

கோல்டன் குலோப் விருதுக்கு ஆலியா பட் நடித்த ‘கங்குபாய் கத்தியவாடி’ , ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’, மற்றும் ‘செல்லோ ஷோ’ ஆகியப் படங்கள் அனுப்பப்பட்ட நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தின்  ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவில் விருதை வென்று அசத்தியது. விருதை அறிவித்த பின் படக்குழு ஆர்ப்பரித்து தங்கள் மகிழ்ச்சியினை வெளிபடுத்தினர். சிறந்த பாடலுக்கான விருதை அப்படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார்.  

And the GOLDEN GLOBE AWARD FOR BEST ORIGINAL SONG Goes to #NaatuNaatu #GoldenGlobes #GoldenGlobes2023 #RRRMovie

pic.twitter.com/CGnzbRfEPk

— RRR Movie (@RRRMovie) January 11, 2023

மேடையில் பேசிய அவர், “என் மனைவி முன்னிலையில் இந்த விருதை வென்றதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருது என்னை மட்டும் சேராது. இந்த விருது எனது சகோதரும் இயக்குனருமான ராஜமௌலியை சேரும். அதனை அடுத்து பாடலாசிரியர் மற்றும் பாடல் அமைத்த குழுவினருக்கும், பாடலுக்கு அருமையாக நடனமாடிய ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை இந்த விருது சேரும்” என்று குறிப்பிட்டார். இதனையடுத்து ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

MM Keeravaani’s #GoldenGlobes2023 acceptance Speech!! ❤️‍🔥❤️‍🔥 #RRRMovie #NaatuNaatu pic.twitter.com/9q7DY7Pn5G

— RRR Movie (@RRRMovie) January 11, 2023

திரைத்துறையில் உலகளவில் உயரிய விருதாக கருதக் கூடிய ஆஸ்காருக்கு அடுத்தப்படியான விருதாக கருத கூடிய கோல்டன் குலோப் விருதை வென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது ஆர் ஆர் ஆர் படக்குழு. மேலும் இதையடுத்து ரசிகர்கள் பிரபலங்கள்  படக்குழுவை பாராட்டி வருகின்றனர். மேலும் ஆர் ஆர் ஆர் படம்  ஆஸ்கார் பரிந்துரை தேர்விலும் இடம் பெற்றுள்ளது. முன்னதாக கோல்டன் குலோப் விருதை 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்திற்கான ஏ.ஆர்.ரஹ்மான் வென்றிருப்பது குரிப்பிடதக்கது.

ஆர் ஆர் ஆர் படத்தினை DDV Entertainment சார்பில் DDV தனய்யா தயாரித்திருந்தார். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் அவர்களுடன் இணைந்து ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா, அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன் ஆகியோர் நடித்திருந்தனர்.