யூடியூபின் மூலம் சமூகப்பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துரைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் புட் சட்னி ராஜ் மோகன்.தன்னுடைய கூர்மையான கருத்துடைய பேச்சால் பலரையும் பெரிதும் ஈர்த்துள்ள இவர் அவ்வப்போது படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார்.

Raj Mohan Debuts Director RockFort Entertainment

தற்போது இவரது புதிய படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தில் யூடியூப் பிரபலமான ப்ளாக் ஷீப் குழுவினர் முக்கிய வேடத்தில் நடிப்பார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Raj Mohan Debuts Director RockFort Entertainment

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.யூடியூபில்  இருந்து இயக்குனராக கால்பதிக்கும் ராஜ்மோகன் வெள்ளித்திரையில் வெற்றிபெற கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Raj Mohan Debuts Director RockFort Entertainment