தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன்.விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் ஒன்றான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று தமிழக மக்களின் மனம் கவர்ந்த பிரபலமாக மாறினார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சில படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார்.

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ரைசா.இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் இலன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் தயாரான  பியார் ப்ரேமா காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார்.இந்த காலத்து லிவ்வின் கலாச்சாரத்தை பற்றி பேசிய இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த இந்த முதல் படம் அவருக்கு லாபகரமான ஒரு படமாகவும் அமைந்தது.இந்த படத்தின் பாடல்களும் செம ஹிட் அடித்திருந்தன.இந்த படத்தின் மூலம் ரைசா தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் FIR,ஜீ.வி.பிரகாஷின் காதலிக்க யாருமில்லை,ஆலிஸ் உள்ளிட்ட சில முக்கிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக போடப்பட்ட லாக்டவுனை அடுத்து ரசிகர்களுடன் உரையாடுவது,அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,போட்டோஷூட்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்வது,உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை செய்து வந்தார் ரைசா.தற்போது நீச்சல்குளத்தில் நீச்சலுடையில் இருப்பது போல சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ரைசா.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்

I love the pool and the pool loves me 🌊 #sundayvibes Photographer : @vigneshkumarphotography Edit : @the_pixchanger Styling - @gegonian by @anushaa13 Outfit - @anushaa13 Make-up : @chisellemakeupandhair Hair : @ashwinihairandmakeup

A post shared by Raiza Wilson (@raizawilson) on