பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இதையடுத்து இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் குவிந்தன. ஹரிஷ் கல்யான் நடிப்பில் இலன் இயக்கிய பியார் ப்ரேமா காதல் படத்தில் இவர் ஹீரோயினாக அசத்தியிருந்தார். இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரைசா கைவசம் FIR, லவ், மற்றும் அலைஸ் போன்ற படங்கள் உள்ளது. 

Raiza Wilson Shares Her Childhood Photo

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். உடற்பயிற்சி, சமையல், நடனம், பாடல் என அசத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்களது சிறு வயது புகைப்படங்கள் மற்றும் ஃபேமிலி ஆல்பம் என பதிவு செய்து வருகின்றனர். 

Raiza Wilson Shares Her Childhood Photo

இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். தனது சிறுவயது புகைப்படத்தையும் ஏலியன் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ள அவர், இரண்டும் ஒன்றுதான்  ஆனால் வேறு என பதிவிட்டிருக்கிறார். ரைசாவின் இந்த சிறுவயது புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகிறது.