பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இதையடுத்து இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் குவிந்தன. ஹரிஷ் கல்யான் நடிப்பில் இலன் இயக்கிய பியார் ப்ரேமா காதல் படத்தில் இவர் ஹீரோயினாக அசத்தியிருந்தார். இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

raiza thanuதற்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் #LOVE எனும் படத்தில் ரைஸா வில்சன் நடிக்கிறார். மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வால்டர் பிலிப்ஸுடன் ஜோடி சேர்கிறார். சாம்.சி.எஸ் இதற்கு இசையமைக்கிறார். அட்லீயிடம் உதவி இயக்குனராய் பணியாற்றிய பாஸ்கோ, இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக கால் பதிக்கிறார். 

hashtaglove hashtaglove

ரைசா கைவசம் FIR மற்றும் Alice போன்ற படங்கள் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.