மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படமான தில் பேச்சரா படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். முகேஷ் சப்ரா இயக்கியுள்ளார். சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2014-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த The Fault in our Stars என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக் தான் தில் பேச்சரா. 

படத்தின் முதல் பாடலான டைட்டில் ட்ராக் சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய இந்த பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ஃபாரா கான் கோரியோகிராப் செய்துள்ளார். பாடல் ரிலீஸை சுஷாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சுஷாந்தின் நடனம் பார்வையாளர்களை ஈர்க்கிறது. பல ரசிகர்கள் கண்ணீருடன் பாடலை பார்த்து வருகின்றனர். 

இந்நிலையில், தில் பேச்சரா படத்தின் டைட்டில் ட்ராக் பாடலை வாசித்து அசத்தியுள்ளார் ரஹீமா ரஹ்மான். இசைப்புயல் AR ரஹ்மானின் மகளான ரஹீமா இசையில் அதிகம் ஆர்வம் உள்ளவர். தந்தையை போல அவரும் சர்வ சாதாரணமாக வாசித்து அசத்துகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஹ்மான் வெளியிட்ட இந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. 

இதன் கீழ் குவிந்த ரசிகர்கள், ரஹீமாவை பாராட்டி வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகள்களான ரஹீமா மற்றும் கதிஜாவுடன் இணைந்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாடியிருக்கிறார். ரஹ்மானின் மகன் அமீன் இசையை நாம் கேட்டிருக்கிறோம். அதே போல் விரைவில் ரஹீமாவும் பாடல் கம்போஸ் செய்து தந்தைக்கு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தில் பேச்சரா படத்தை ஜுலை 24-ம் தேதி நேரடியாக தனது OTTதளத்தில் வெளியிடுகிறது டிஸ்னி ஹாட்ஸ்டார். டிஸ்னி ஹாட்ஸ்டாரைப் பார்க்க சந்தாதாரர்களாக இல்லாமல் இருப்பவர்களும் இந்தியாவில் இப்படத்தை இலவசமாகப் பார்க்கலாம். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#dilbechara

A post shared by RR (@raheemarahman) on