சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். நாடு முழுதும் கொரோனா வைரஸ்  அச்சுறுத்தி வரும் நிலையிலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அத்தியாவசிய பொருட்கள் உணவு, வெளியூர் தொழிலாளிகளை பத்திரமாக அவர்களது ஊரில் சேர்த்தது என பல நல்ல செயல்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன், அக்ஷய் குமார் வைத்து இவர் இயக்கிய லக்ஷ்மி பாம் படத்தை வெளியிடவுள்ளார். அதன் பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் ரஜினியுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், மலரும் நினைவுகள்.. என்னுடைய குருவுடன் உழைப்பாளி படப்பிடிப்பில் நான் குரூப் டான்சராக இருந்தபோது.. கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது என ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். 1993-ல் உருவான உழைப்பாளி படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அந்த படத்தில் குரூப் டான்சராக ராகவா லாரன்ஸ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் வீட்டில் பணிபுரிந்த போது ராகவா லாரன்ஸின் திறமையை கண்ட சூப்பர் ஸ்டார், பிரபுதேவாவை அழைத்து ராகவா லாரன்ஸையும் அவரது டான்ஸ் குழுவில் சேர்த்துக் கொள்ளும் படி கூறியுள்ளார். அதன் பிறகு பிரபுதேவா வீட்டிலிருந்து ராகவா லாரன்ஸுக்கு அழைப்பு வந்துள்ளது. ரஜினிகாந்த் உன் நடனத்தை பார்த்து வியந்து விட்டார். உனக்கு ஒரு பிரேக் தேவை. நாளையிலிருந்து என் டீமில் சேர்ந்து கொள் என பிரபுதேவா கூற, இன்று நடனத்தில் பட்டையை கிளப்புகிறார் லாரன்ஸ். 

சாதாரண நடனக் கலைஞனாக இருந்து நடன மாஸ்டராக, அதன்பின் நடிகராக தற்போது இயக்குனராகவும் வளர்ந்து பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழும் ராகவா லாரன்ஸை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.