ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளியான காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிப்பில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார் ராகவா லாரன்ஸ். இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இவர் அடுத்ததாக பொல்லாதவன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் ருத்ரன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சரத்குமார்,நாசர்,பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.K.P.திருமாறன் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ருத்ரன் திரைப்படம் திரையரங்குகளில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி 2022-ல் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை  ரீமிக்ஸ் செய்துள்ளனர்.ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.