தமிழில் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை எழுதி இயக்கியுள்ளார். தற்போது நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
 
இந்நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானது. 5 ஸ்டார் க்ரியேஷன்ஸ் தயாரிப்பாளர் திரு.கதிரேசன் மற்றும் GROSS ROOT ஃபிலிம் கம்பெனி சார்பில்  இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். 

இயக்குனர் வெற்றிமாறனின் எழுத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு அதிகாரம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மொழிகளிலும் உருவாகவுள்ள அதிகாரம் திரைப்படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவுக்கும் வகையில் மிரட்டலான ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

முன்னதாக இயக்குனர் மணிமாறன் இயக்கித்தில் விறுவிறுப்பான படமாக ரசிகர்கள் மத்தியில் வறவேற்ப்பை பெற்ற உதயம் NH4 திரைப்படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை அமைத்து இருந்தார். அந்த வகையில் தற்போது ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் வெளிவர உள்ள அதிகாரம் திரைப்படத்திற்கும் இயக்குனர் வெற்றிமாறன் திரைக்கதை அமைப்பதால் திரைப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.