ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன்... முதல் பாடல் குறித்த அசத்தலான அறிவிப்பு இதோ!

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட முதல் பாடல் குறித்து அறிவிப்பு,raghava lawrence in rudhran first single announcement | Galatta

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கமர்ஷியல் ஹீரோவாகவும் மற்றும் இயக்குனராகவும தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் பக்கா மாஸ் என்டர்டெய்னிங் திரைப்படங்களை வழங்கிவரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வரும் சந்திரமுகி 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் P.வாசு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் திரைக்கதையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார்.

இந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் ருத்ரன். தயாரிப்பாளர் S.கதிரேசன் தனது FIVE STAR கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள ருத்ரன் திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ருத்ரன் திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவர உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

மேலும் இந்த முதல் பாடல் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டான ஒரு பழைய பாடலின் ரீமேக் என படக்குழுவினர் குறிப்பிட்டு அது என்ன பாடல் என ரசிகர்களிடம் கேள்வியும் எழுப்பியுள்ளனர். அந்தப் பாடல் "பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்" பாடலின் ரீமேக்காக இருக்கும் என தகவல்கள் வெளிவருகின்றன. இது குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

It’s time to make moves & vibe back to the trendy beats !!

Guess what’s coming from #Rudhran in the lines of Tamil remixes lists 😉🥳

Old is definitely Gold !!@offl_Lawrence @kathiresan_offl @gvprakash @5starcreationss

Theatrical Release On April 14. pic.twitter.com/NWEVa4YClT

— Five Star Creations LLP (@5starcreationss) February 8, 2023

தளபதி விஜயின் லியோ படத்திலிருந்து விலகலா..? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா! வைரல் புகைப்படம் உள்ளே
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்திலிருந்து விலகலா..? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா! வைரல் புகைப்படம் உள்ளே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தின் ஆக்சன் டீம்... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தின் ஆக்சன் டீம்... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

பத்து தல டைட்டில் ஏன்..? உண்மையை உடைத்து சுவாரஸ்யமாக பதிலளித்த இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணா! வீடியோ இதோ
சினிமா

பத்து தல டைட்டில் ஏன்..? உண்மையை உடைத்து சுவாரஸ்யமாக பதிலளித்த இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணா! வீடியோ இதோ