இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை செதுக்கி கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கத்தில் வெளியான காஞ்சனா சீரிஸ் ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடப்படுகிறது. தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார். ஹிந்தியில் அக்ஷய் குமார் வைத்து லக்ஸ்மி பாம் படத்தை இயக்கி வருகிறார். மக்கள் நலன் கருதி பல நற்பணிகளை செய்து வருகிறார். 

Raghava Lawrence Emotional Post About Kid

சில நாட்கள் முன்பு லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் உணவு பெற்ற சிறுவன், அவரது போஸ்டருக்கு அன்புடன் முத்தம் கொடுக்கும் போட்டோ வைரல் ஆனது. அதை பார்த்த லாரன்ஸ், இந்த போட்டோ, எனக்கு விருது கிடைத்த உணர்வை கொடுக்கிறது என பதிவிட்டார்.

Raghava Lawrence Emotional Post About Kid

தற்போது தனது ரசிகர் மன்றம் மூலம் அந்த சிறுவனை கண்டுபிடித்திருக்கிறார் லாரன்ஸ். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், இந்த சிறுவனை பார்க்கும் போது சிறு வயதில் என்னை பார்த்தது போல இருக்கிறது. நானும் இதுபோல் தான் கஷ்டமான சூழலில் வளர்ந்தேன். இந்த சிறுவனை காண ஆவலாக உள்ளேன். இவனுக்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார். லாரன்ஸின் இந்த பதிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.