திரையுலகில் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி இன்று டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, இயக்குனராக அதை தாண்டி சிறந்த மனிதராக விளங்கி வருகிறார். இவரின் காஞ்சனா படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 

RaghavaLawrence

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு எமோஷனல் சம்வத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், பிறந்து ஒன்பது நாட்கள் மட்டுமே ஆன குழந்தைக்கு இன்று ஹைதராபாத்தில் இதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இன்னும் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கவில்லை. இந்நேரத்தில் மருத்துவர்களை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். மேலும் பணத்தை தாண்டி, அனைவரின் பிரார்த்தனைகளும் தேவை. இந்த குழந்தைக்காக அனைவரும் ஒரு நிமிடமாவது வேண்டிக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். 

RaghavaLawrence

ஹிந்தியில் இவர் இயக்கி வரும் லக்ஸ்மி பாம் படத்தை தொடர்ந்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் துவங்கவுள்ளார். கடைசியாக FEFSI தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் லாரன்ஸ். ராகவா லாரன்ஸின் இந்த நற்குணத்தை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.