திரையுலகில் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி இன்று டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, இயக்குனராக அதை தாண்டி சிறந்த மனிதராக விளங்கி வருகிறார். 

raghavalawrance

திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான படமான காஞ்சனா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்தை இயக்கி வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு குரல் குடுக்கும் வகையில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Raghavalawrance

அந்த வீடியோவில், சிறப்பு திறன் கொண்ட ரசிகருடன் சேர்ந்து கைகளை சுத்தமாக வைப்போம். கொரோனாவை விரட்டி அடிப்போம் என கூறியுள்ளார். திரைப்பிரபலங்கள் இதுபோன்ற விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடுவது ஆரோக்கியமான ஒன்றாக திகழ்கிறது.