தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. துணை நடிகையாக திரையில் கால்பதித்து இன்று வளர்ந்து வரும் ஹீரோயின்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். ஹை கிளாஸ் பெண்ணாக மட்டுமல்லாமல், நம் பார்த்து பழகும் பக்கத்து வீட்டு பெண்ணாகவும் திரையில் ஜொலிப்பது த்ரிஷாவின் மிகப்பெரிய பிளஸ். தமிழ் இண்டஸ்ட்ரியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என அனைத்து ஏரியாக்களிலும் சொல்லி அடிக்கும் கில்லியாய் விளங்கி வருகிறார். 

த்ரிஷா நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் ராங்கி. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தை எங்கேயும் எப்போதும் புகழ் சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஏ ஆர் முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். சத்யா இசையமைத்துள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சுபாரக் படத்தொகுப்பு செய்துள்ளார். 

ராங்கி படத்தின் முக்கியமான காட்சிகளை உஸ்பகிஸ்தானில் படமாக்கினர் படக்குழுவினர். குளிரையும் பொருட்படுத்தாது படப்பிடிப்பை வெற்றிகரமாக கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்புக்கு முன்னரே நிறைவு செய்தனர். இந்நிலையில் ராங்கி படத்தின் முதல் சிங்கிளான பனித்துளி பாடல் வெளியானது. சின்மயி, சத்யா, யாசின் நிசார் பாடிய இந்த பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார். 

ட்ரெண்ட் செட்டராக திகழும் த்ரிஷா, சென்ற லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தினார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது. கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 2021 ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என செய்திகள் வெளியாகிறது.