கடந்த 2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லக்ஷ்மி. பல மொழிகளிலும் புகழ்பெற்று விளங்கும் நடிகையான ராய் லட்சுமி, சமீப காலமாக பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் தனது சமூக வலைதள பக்கத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி ஃபோட்டோ ஷூட் நடத்திய ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

ராய் லட்சுமியில் கவர்ச்சி ஃபோட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், திடீரென்று தனது நிச்சயதார்த்த தேதியை வெளியிட்டுள்ளார். இது அவரது தீவிர ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாப்பிள்ளை யார் என குறிப்பிடாமல், ஏப்ரல் 27 ம் தேதி நிச்சயதார்த்தம் என்பதை என்று மட்டும் கூறி உள்ளார். 

நிச்சயதார்த்த தேதியை அறிவித்து விட்ட ராய் லட்சுமி, தான் யாரை மணக்க போகிறேன் என்பதை சொல்ல மாட்டேன் என கூறி உள்ளார். இது தொடர்பாக ராய் லட்சுமி வெளியிட்டுள்ள பதிவில், பல காலமாக நிறைய பேர் என்னிடம் கேட்டு வருகின்றனர். அதனால் அதை நிவர்த்தி செய்ய முடிவு செய்துள்ளேன். நான் எனது உறவை மறைக்கவில்லை. இது மற்றவர்களுக்கு அவசியமில்லாதது என நான் நினைக்கவில்லை.

தனிமைப்பட்ட விஷயம் என நான் நினைக்கிறேன். எனது வாழ்க்கை துணைவரை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறேன். அவரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கடந்த வாரம் அழைப்பு விடுத்ததாகவும், எதிர்பாராமல் இது நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இது குடும்பத்திற்கு மகிழ்ச்சியை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அனைத்தையும் கூறி விட்டு கடைசியாக, கைகளை முறையாக சுத்தம் செய்யுங்கள், சானிடைசரை பயன்படுத்துங்கள் என்பதை நினைவுபடுத்தவே மற்றொருவரின் இந்த பதிவை திருடி உள்ளேன் என தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவும் தான் ராய் லட்சுமி இந்த தகவலை பதிவிட்டுள்ளார். உண்மையில் நிச்சயதார்த்தம் என கூறுவதை பொய் என கூறப்படுகிறது.

ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் மிருகா படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.