தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அருண்விஜய் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வரவுள்ளன. முன்னதாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் பார்டர் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

முன்னதாக நடிகர் அருண்விஜய் மற்றும் அவரது மகன் அர்நவ் இணைந்து நடித்துள்ள ஓ மை டாக் இம்மாதம்(டிசம்பரில்) நேரடியாக ரிலீஸாகவுள்ளது. மேலும் அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள பாக்சர்,காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சீனம், மற்றும் மூடர்கூடம் பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னிச்சிறகுகள் ஆகிய படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. 

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனரான ஹரி இயக்கத்தில் யானை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் அருண் விஜய். யானை படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார் 

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் யானை திரைப்படத்தின் தனது டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். எனவே இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் யானை படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.